மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா? சுந்தர் சி-க்கு பிரகாஷ் ராஜ் கேள்வி

Madurai Central constituency : மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா? என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், அவர் சுந்தர் சி-யையும் விமர்சித்துள்ளார்.

Published on: April 19, 2026 at 3:44 pm

மதுரை, ஏப்.19, 2026: மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக தி.மு.க. சார்பில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுகிறார். தி.மு.க. அமைச்சரான இவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் சுந்தர் சி களம் இறக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், சுந்தர் சிக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா? இத்தனை நாள் நீங்கள் எங்கிருந்தீர்கள் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், பிரகாஷ் ராஜ், “புதிய நீதிக்கட்சியில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்..? அதன் கொள்கை என்ன? சினிமாவில் இயக்குநர் ஆவதற்கு எத்தனை விஷயங்களை கஷ்டப்பட்டு கற்றிருப்பீர்கள். ஆனால், எம்.எல்.ஏவாக மட்டும் உடனே ஆகிவிடுவீர்களா? எனவும் கேட்டுள்ளார்.

தொடர்ந்து, “எந்த அரசியல் பிரச்னைகளுக்கோ அல்லது மதுரை மக்களுக்காகவோ குரல் கொடுக்காமல், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் எம்.எல்.ஏ ஆக வேண்டுமென வந்துவிட்டால்… மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா?” எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கிடையில், “*வேட்பாளராக ஆக்கப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்பு வரை சினிமா சூட்டிங்கில் இருந்தீர்கள்” எனவும் அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக இதேபோல் நடிகர் விஜயை கடந்த இரு தினங்களுக்கு முன்பு விமர்சித்த பிரகாஷ் ராஜ், சினிமா மாடல் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முதலமைச்சர் மசோதா நகலை எரித்தது குற்றம்.. அன்புமணி ராமதாஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com