தி.மு.க எம்.எல்.ஏ அதிரடி கைது.. 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு!

DMK MLA Markandeyan Arrested : தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்; அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: July 20, 2026 at 1:19 pm

தூத்துக்குடி, ஜூலை 20, 2026: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக சார்பான நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில், விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜய்யை கடுமையாக சர்ச்சையான முறையில் விமர்சித்தார்.

அப்போது. “இவ்வளவு கேவலமான முதலமைச்சரை இந்திய வரலாறே பெற்றது கிடையாது” என அவர் பேசியது பெரும் எதிரொலியை ஏற்படுத்தியது. சட்டசபையில் முன்னாள் முதலமைச்சரை குறித்தும், திமுக எம்எல்ஏவின் பேச்சு மிரட்டும் தொனியில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த பேச்சைத் தொடர்ந்து, தூத்துக்குடி தவெக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் புகார் அளித்தார். அதன் பேரில், இன்று அதிகாலை போலீசார் மார்க்கண்டேயனின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த முயன்ற அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர், போலீசார் அவரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, செய்தியாளர்கள் 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தடுக்கப்பட்டுள்ளனர். மார்க்கண்டேயன் மீது BNS 351(3) (கடுமையான குற்ற மிரட்டல்), BNS 352 (அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு அவமதித்தல்), BNS 353(2) (சமூகங்களுக்கு இடையே பகைமையைத் தூண்டும் பொய்யான தகவல் பரப்புதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் விஜய்யை அவதூறாக விமர்சித்ததாக ஜூலை 3 அன்று கைது செய்யப்பட்டார். அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு, அன்றிரவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்.. அன்புமணி ராமதாஸ்

 காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம்.. மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதியோம்.. அமைச்சர் விஸ்வநாதன்! Minister Viswanathan on Mekedatu

 காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம்.. மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதியோம்.. அமைச்சர் விஸ்வநாதன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com