Haridwar: கோவில் அருகே கொன்று புதைக்கப்பட்ட இரு சாதுக்கள்; ஹரித்வார் அருகே நடந்தது என்ன?
Haridwar: கோவில் அருகே கொன்று புதைக்கப்பட்ட இரு சாதுக்கள்; ஹரித்வார் அருகே நடந்தது என்ன?

Published on: July 21, 2026 at 8:30 pm
ஹரித்வார், ஜூலை 21, 2026: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரின் பாத்ரி பகுதியில் உள்ள பாத்ரேஷ்வர் மகாதேவ் கோயிலில் வசித்து வந்த இரண்டு சாமியார்கள் கொலை செய்யப்பட்டு காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை முதல் காணாமல் போனதாக கோயில் ஊழியர்கள் புகார் அளித்ததையடுத்து, போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். இந்நிலையில், காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் பிணமாக சேவா கிரி மற்றும் உத்தம் கிரி ஆகிய இரு சாமியார்கள் கண்டெடுக்கப்பட்டனர்.
பாத்ரி காவல் நிலைய பொறுப்பாளர் ரவீந்திர சிங் தலைமையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, அருகிலுள்ள காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த உடல்கள் மீட்கப்பட்டன. தடயவியல் நிபுணர் குழுவும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.
கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் சேகர் சந்திர சுயால், “சமீபத்தில் மூன்று சாமியார்கள் கோயிலுக்கு வந்து தங்கியிருந்ததும், அதே நேரத்தில் காணாமல் போனதும் தெரியவந்துள்ளது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்” எனக் கூறினார்.
கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். அடையாளம் தெரியாத மூன்று பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஹரித்வார் மூத்த காவல் கண்காணிப்பாளர் நவநீத் சிங் புல்லர் இரண்டு காவல் குழுக்களை அமைத்துள்ளார். கோயிலில் இருந்து பணம், சிலைகள், நன்கொடைகள் அல்லது மதிப்புமிக்க பொருட்கள் காணாமல் போயுள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : எனக்கு பசித்தது, பர்கர் சாப்பிட்ட சென்றேன்.. கரப்பான்பூச்சி செய்தித் தொடர்பாளர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com