முதலமைச்சர் மசோதா நகலை எரித்தது குற்றம்.. அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss on Womens Quota Bill : ஒரு முதலமைச்சர் மசோதா நகலை எரித்தது குற்றம்; இது தமிழ்நாட்டு மக்களுக்கு அவமானம் என அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

Published on: April 19, 2026 at 1:58 pm

சென்னை, ஏப்.19, 2026: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடலூரில் ஏ.என்.ஐ மற்றும் ஐ.ஏ.என்.எஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, ஒரு முதலமைச்சர் மசோதா நகலை எரித்தது குற்றம் எனத் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அன்புமணி ராமதாஸ், “இந்திய அரசு, பெண்களுக்கு மக்களவை மற்றும் சட்டமன்ற இடங்களை ஒதுக்கும் ஒரு அரசியலமைப்புத் திருத்த மசோதாவைக் கொண்டுவந்தது. ஆனால், அந்த மசோதா மக்களவையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸால் தோற்கடிக்கப்பட்டது” என்று குற்றஞ்சாட்டினார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா

அன்புமணி ராமதாஸ் பேட்டி

மேலும், “தமிழக முதலமைச்சர், அந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே, தமிழகத்தில் கருப்புச் சட்டை அணிந்து அந்த மசோதாவின் நகலை எரித்துள்ளார்.
ஒரு முதலமைச்சர் மசோதாவின் நகலை எரிப்பது என்பது கேள்விப்படாத ஒன்று. மேலும், முன்னெப்போதும் இல்லாத ஒன்று. இது ஒரு குற்றம். பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவின் நகலை ஒரு முதலமைச்சர் எரித்தது தமிழக மக்களுக்கு ஏற்பட்ட அவமானம்” எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : மோடி அரசின் திட்டம் தோல்வி.. டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு.. மு.க ஸ்டாலின்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com