மோடி அரசின் திட்டம் தோல்வி.. டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு.. மு.க ஸ்டாலின்!

M K Stalin in Theni : மோடி அரசின் திட்டம் படுதோல்வி என விமர்சித்துள்ள மு.க ஸ்டாலின், டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு என்றும் தெரிவித்துள்ளார்.

Published on: April 18, 2026 at 2:34 pm

சென்னை, ஏப்.18, 2026: “தமிழ் மண்ணில் கருப்பு- சிவப்பு- நீலக் கொடிகள் பறக்கும்; காவிக்கொடி பறக்காது” எனவும் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஆண்டிப்பட்டியில் ஏப்ரல் 17ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க ஸ்டாலின், “தமிழ் – தமிழினம் – தமிழ்நாடு இந்தச் சொற்களைக் கேட்டாலே கசக்கும் கூட்டம், நம்முடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்று சதி வேலையைச் செய்திருக்கிறார்கள்” எனக் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து, “இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மதவெறியை வளர்த்து, அதன் மூலமாக இந்த நாட்டை ஆள்வதற்குப் பாஜக செய்துள்ள சூழ்ச்சிதான் இந்த தொகுதி மறுவரையறை” என்றார்.

உண்மை என்ன?

மேலும், “இதை மேலோட்டமாக பார்த்தால், பிரதமரும், உள்துறை அமைச்சரும் சொல்வது போன்று, நம்முடைய தொகுதி எண்ணிக்கையை அதிகரிப்பது போல் தெரியும்; ஆனால் உள்ளபடியே நமது தொகுதி எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது” என்று குற்றஞ்சாட்டினார்.

ஊழல்வாதிகள் கூட்டணி

இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சித்த மு.க ஸ்டாலின், “பழனிசாமி அமைத்திருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியால், தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு நல்லதாவது நடக்கிறதா? தமிழ்நாட்டிற்குத் கெடுதல் செய்ய ஊழல்வாதிகளை மிரட்டி உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணிதான் இது” என்றார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கருப்பு-சிவப்பு-நீலக்கொடி பறக்கும் எனக் கூறிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், காவிக் கொடியை பறக்க விடாமாட்டர்கள்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நம்முடைய சாதனைகளை நாமே முறியடிப்போம்” எனவும் மு.க ஸ்டாலின் கூறினார்.

இதையும் படிங்க: நம் எதிர்ப்பை கண்டு உத்ரவாதம் அளித்த மோடி, ஷா.. மு.க ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்!

தவறான ரயிலில் ஏறிவிட்டால் துன்பப்படுவதை விட இறங்குவது மேலானது.. விவாகரத்து குறித்து ஹன்சிகா மோத்வானி Hansika Motwani

தவறான ரயிலில் ஏறிவிட்டால் துன்பப்படுவதை விட இறங்குவது மேலானது.. விவாகரத்து குறித்து ஹன்சிகா


திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com