Palm workers protest in Valliyur | “தமிழ்நாட்டில் பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க வேண்டும்; கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்பதை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டமானது வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும். பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. மேலும், பனைத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன், பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை மாநிலத் தலைவர் டெய்சி தங்கையா உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரை வெட்டி கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….
Tirunelveli | கோவில்பட்டி அருகே கார் விபத்தில் பத்திரிக்கை உரிமையாளர் உயிரிழந்தார்….
Tirunelveli | திருநெல்வேலியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது….
Tirunelveli | திருநெல்வேலி தலைமை காவலர் ஒருவர், பெண் ஒவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
Tirunelveli | வள்ளியூர் நகராட்சியுடன் தெற்கு வள்ளியூர் ஊராட்சியை இணைக்க 23 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்….
Dr Ramadoss | திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த குருநாதன் மறைவுக்கு பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்