Coimbatore Pappammal death | கோவை பாப்பம்மாள் மரணத்துக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய முன்னோடி பாப்பம்மாள் பாட்டி முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
110 வயதான பாப்பம்மாள் பாட்டி கடைசி வரை இயற்கை விவசாயத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இளம் தலைமுறையினருக்கு இயற்கை விவசாயம் குறித்து பாடங்களை நடத்தியுள்ளார்.
இவரது சேவைகளை மதித்து 2021-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே காலில் விழுந்து வணங்கியது அவருக்கு வழங்கப்பட்ட சிறந்த அங்கீகாரமாகும்.
பாப்பம்மாள் பாட்டியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க
Anbumani Ramadoss: ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த மாணவி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்….
Anbumani Ramadoss: சிப்காட் என்ற பெயரில் கடலூரை நச்சுக்
காடாக மாற்றுவதா எனக் கேள்வியெழுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ்….
Anbumani Ramadoss: “நச்சுவாயுக்களை பரப்பும் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு கருத்துக்கேட்பு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்….
Vanniyar reservation protest: டிசம்பர் 17 வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்….
Anbumani Ramadoss: “107-ஆம் நாளாக போராடும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களுக்கு உணவு வழங்குவதாக திமுக மார்தட்டுவது கொடூரமான நகைச்சுவை” என பா.ம.க…
Anbumani Ramadoss: தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு ரூ.1720 கோடிக்கு முதலீடு சென்றதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்