Chennai Horror: சென்னையில் இளம்பெண் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில், இதுவரை 6 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
Chennai Horror: சென்னையில் இளம்பெண் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில், இதுவரை 6 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: May 31, 2026 at 10:08 pm
சென்னை, மே 31, 2026: சென்னை கோயம்பேட்டில் நடந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் வசித்து வந்த 18 வயது யான்சி, தனது தோழியைச் சந்திக்க சென்னை வந்திருந்தார். நண்பர்களுடன் மதுபான விடுதிக்கு சென்ற அவர், அங்கு ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக உயிரிழந்தார்.
மதுபான விடுதியில் ஏற்பட்ட சண்டையால் இருதரப்பினரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் சாலையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள், யான்சி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதினர். அதனால் யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதே வாகனத்தில் இருந்த மற்றொரு சிறுமி கடுமையாக காயமடைந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சுயநினைவை இழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, யான்சியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விபத்தில் பயன்படுத்தப்பட்ட கார் சுமன் சக்திவேல் என்பவருடையது என தெரியவந்தது. அவர் மற்றும் நண்பர்கள் புதுச்சேரியில் பதுங்கியிருந்த நிலையில், அங்குள்ள காவல்துறையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர்.
மேலும், விருகம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் பகுதிகளில் பதுங்கியிருந்த பாலகுரு, கிஷோர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : மாணவர்களுக்கு முதலில் நல்ல ஒழுக்கத்தையும், பாலியல் கல்வியையும் கற்றுத் தர வேண்டும்… பள்ளிக் கல்வித்துறைக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com