பிரேமலதா பரபரப்பு.. துணை முதல்வர் பதவி தேமுதிகவுக்கு?

Premalatha : துணை முதலமைச்சர் பதவி தே.மு.தி.க.வுக்கு கிடைத்திருக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியது அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: May 31, 2026 at 10:20 pm

சென்னை, மே 31, 2026: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “நான் ஒரு வார்த்தை சொன்னிருந்தால் முதல்வர் விஜய் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்திருப்பார்” என்று பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரேமலதா தலைமையேற்று, கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

கூட்டணி அரசியல்

அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தேமுதிக இணைந்தது. கூட்டணித் தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அவர், கூட்டணியை வருங்காலங்களிலும் தொடர்வோம் என உறுதியளித்தார்.

மக்களின் பிரச்சினைகள்

மேலும், பயிர்க்கடன் தள்ளுபடி, மின்வெட்டு பிரச்சனை, மேகதாது அணை விவகாரம், டாஸ்மாக் கடைகள் மூடல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

கூட்டணி தர்மம்

மேலும், “தேமுதிக எந்த நேரத்திலும் பதவிக்கு ஆசைப்படாத கட்சி. கூட்டணி தர்மத்தில் உறுதியாக இருப்போம். மற்ற கட்சிகள் பதவிக்காக விலை போகின்றன” என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

அதிமுக மீது குற்றச்சாட்டு

“அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மரியாதை அளிக்கவில்லை, எம்.பி. சீட்டும் வழங்கவில்லை” என பிரேமலதா குற்றம்சாட்டினார். அதிமுகவின் சுயநல அரசியல் காரணமாகவே திமுகவுடன் கூட்டணி அமைத்ததாகவும் தெரிவித்தார். மேலும், “2011-ல் அதிமுக தேமுதிகவுக்கு செய்ததை இன்று தவெக அதிமுகவுக்குச் செய்துள்ளது. வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்று பிரேமலதா கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க : சென்னையில் பயங்கரம்.. இளம்பெண் கார் ஏற்றிக் கொலை.. 6 பேர் கைது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com