Ashwini Vaishnaw | பண்டிகை காலத்தை முன்னிட்டு 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார்.
இது குறித்து அவர், “பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் திருவிழாக்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனால் 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கூடுதல் நெரிசலைக் கவனித்துக்கொள்ள 12,500 பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன” என்றார். தொடர்ந்து, “பல ரயில் வழித்தடங்கள், குறிப்பாக பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் வழித்தடங்கள், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளின் போது அதிக நெரிசலைக் காண்கின்றன” என்றார்.
இதையடுத்து, “கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விழாக்காலத்திற்காக இதுவரை மொத்தம் 5,975 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன” என்றார். துர்கா பூஜை அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்குகிறது, தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படும், சாத் பூஜை இந்த ஆண்டு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Gujarat bridge collapse: குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக ஆற்றில் விழுந்துள்ளன….
Maharashtra: மராத்தியில் பேசு எனக் கூறி ரெஸ்டாரெண்ட் உரிமையாளரை ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா தொண்டர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
Andhra Pradesh: காருக்குள் ஏசி போட்டு தூங்கிய அண்ணன் தம்பி இருவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்….
Telangana factory blast: தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலையில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்….
Telugu TV anchor Swetcha: தெலுங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கின்றனர்….
Lord Jagannath Rath Yatra stampede: ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் யாத்திரையில் இன்று (ஜூன் 29 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்