Tamil Nadu BJP state president: தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விலக உள்ளார்; புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் யார் தெரியுமா?
Tamil Nadu BJP state president: தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விலக உள்ளார்; புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் யார் தெரியுமா?
Published on: April 11, 2025 at 3:43 pm
சென்னை ஏப்ரல் 11 2025: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே கூறியது போல், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய தலைவர் அண்ணாமலை போட்டியில் இல்லை.
இந்த தகவலை அண்ணாமலை ஏற்கனவே செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நைனார் நாகேந்திரன் தலைவர் பதவிக்கு இன்று ( ஏப்ரல் 11 2025) நாமினேசன் தாக்கல் செய்தார்.
அப்போது பொன் ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா, வானதி சீனிவாசன், எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.
நைனார் நாகேந்திரன் நாமினேசன் தாக்கல் செய்துள்ள நிலையில் மற்ற நபர்கள் யாரும் நாமினேஷன் தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது. மேலும் பாரதிய ஜனதா கட்சியில் தலைவராக 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் நைனார் நாகேந்திரன் பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. நைனார் நாகேந்திரன் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்புகள் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டாம் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். அவர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் ஆலோசனை நடத்தினார். அப்போது அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற அறிவிப்பு நாளை (ஏப்ரல் 12 2025) வெளியாகிறது.
இதையும் படிங்க; பொன்முடி கட்சிப் பதவி பறிப்பு.. மு க ஸ்டாலின் அதிரடி.. பின்னணி என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com