MK Stalin removes Minister Ponmudi: திமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடியை நீக்கி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் பின்னணி என்ன?
MK Stalin removes Minister Ponmudi: திமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடியை நீக்கி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் பின்னணி என்ன?
Published on: April 11, 2025 at 12:36 pm
சென்னை ஏப்ரல் 11 2025: தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ” திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி, வகுத்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
என்ன நடந்தது?
மு.க. ஸ்டாலின் நெருங்கிய அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி, அண்மையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் ஒரு இழிவான கதையைச் சொல்லி, அதனை சைவம் மற்றும் வைணவத்துடன் தொடர்பு படுத்தினார். சைவம் என்றால்.. வைணவம் என்றால்.. என அவர் பேசிய பேச்சுக்கள் கேட்போரின் காதுகளை கூசச் செய்யும்.
மூத்த அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. பலரும் இது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். மேலும் இதுபோல் எந்த ஒரு மதத்தையும் கொச்சைப்படுத்தி பேச கூடாது; அமைச்சர் பொன்முடி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என எதிர்ப்புகள் எழுந்தன.
இந்த நிலையில் அவரை கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து மு.க. ஸ்டாலின் விடுவித்துள்ளார். பொதுவாக இதுபோன்ற அறிவிப்புக்கள் துரைமுருகன் பெயரில் வெளியாகும். ஆனால் பொன்முடி முக்கிய பதவி வகிப்பதால், அவரை நீக்கி மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கனிமொழி எதிர்ப்பு
இதற்கிடையில் அமைச்சர் பொன்மொழியின் பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் தளத்தில் கனிமொழி, ” அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக் கொள்ள முடியாதது; எந்த காரணத்திற்காக பேசப்பட்டிருந்தாலும் இது போன்ற கொச்சையான பேச்சுக்கள் கண்டிக்கத்தக்கவை” என தெரிவித்து இருந்தார்.
அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 11, 2025
முதல் முறையல்ல..
பெண்கள் குறித்து இழிவாக பேசி பொன்முடி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, மகளிர் இலவச பயணம் குறித்தும் பொன்முடி சர்ச்சையாக பேசி இருந்தார். ஓசி.. ஓசி.. ஓசி.. என அவர் பேசியதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் இருந்தன. இந்த நிலையில் மீண்டும் பெண்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமைச்சர் பொன்முடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Tamil News Live Updates April 11 2025: திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com