Case registered against Annamalai and Tamilisai Soundararajan: தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் கு. அண்ணாமலை மற்றும் தமிழிசை செளந்தரராஜன் மீது அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Case registered against Annamalai and Tamilisai Soundararajan: தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் கு. அண்ணாமலை மற்றும் தமிழிசை செளந்தரராஜன் மீது அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on: March 18, 2025 at 4:43 pm
சென்னை, மார்ச் 18.2025: அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாக பாஜக தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரகள் மீது சட்டவிரோதமாக ஒன்றுகூடியதற்காகவும், அனுமதியின்றி போராட்டங்களை நடத்தியதற்காகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, முன்னாள் தலைவரும், கவர்னருமான தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட 1,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, கடந்த வாரம், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு வெளியே திங்கள்கிழமை (மார்ச் 17 2025) தமிழ்நாடு பாஜக போராட்டம் நடத்துவதாக அறிவித்தது.
டாஸ்மாக் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜ.க.வினரை 6 மணிக்கு மேல் காவலில் வைத்த நிலையில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அண்ணாமலை. #Annamalai #BJP #TNPolitics pic.twitter.com/NMra1apAK3
— Dravidan Times (@DravidanTimes) March 17, 2025
இந்த நிலையில், டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ₹1,000 கோடி நிதி முறைகேடுகள் தொடர்பாக கிழக்கு கடற்கரை சாலையில் அண்ணாமலை தடுத்து நிறுத்தப்பட்டார். இதேபோல், பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது வீட்டை விட்டு போராட்டம் நடத்தச் சென்றபோது நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பாஜகவின் மூத்த தலைவர்கள் எச். ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு மாலை வரை மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், சட்டவிரோதமாக ஒன்றுகூடியதற்காகவும், அனுமதியின்றி போராட்டங்களை நடத்தியதற்காகவும் அண்ணாமலை மற்றும் 1,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நான் அந்த வண்டியில் ஏற மாட்டேன்; என்ன தப்பு.. கொந்தளித்த எச். ராஜா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com