IMD Rain Alert : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இன்று (மே 2, 2026) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
IMD Rain Alert : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இன்று (மே 2, 2026) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.

Published on: May 2, 2026 at 12:27 pm
புதுடெல்லி, மே 2, 2026: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று (சனிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி) இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அஸ்ஸாம், மேகாலயா, சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என கணித்துள்ளது.
மேலும், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஜம்மு காஷ்மீர், கிழக்கு ராஜஸ்தான், மத்யபிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் இடியுடன் கூடிய மின்னல் மற்றும் பலத்த காற்று வீசும் வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, கடலோர ஆந்திரப் பிரதேசம், கடலோர கர்நாடகா மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் இன்று வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதையும் படிங்க : சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் மரணம்.. குற்றவாளிகள் ஜூன் 1க்குள் மேல்முறையீடு.. ஐகோர்ட்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com