நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய ஆணையர்.. யார் இந்த ஐஸ்வர்யா ராமநாதன்?

IAS Aishwarya Ramanathan : நாகர்கோவில் மாநகராட்சி புதிய ஆணையராக ஐஸ்வர்யா ராமநாதன் IAS நியமிக்கப்பட்டுள்ளார்.

Published on: June 17, 2026 at 3:49 pm

கன்னியாகுமரி, ஜுன் 17 2026: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஐஸ்வர்யா ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2020 ஆம் ஆண்டு தமிழக கேடர் அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 47-வது இடத்தையும், தமிழக அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவரது பணிப்பயணத்தில் வேலூரில் உதவி ஆட்சியராகவும், பொன்னேரியில் சப் கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் டெல்லியில் பாராளுமன்றத்தில் சட்டம் மற்றும் நிதி துறையில் செயலாளராக பணியாற்றினார். 2023 டிசம்பர் மாதம் முதல் தூத்துக்குடி மாவட்ட DRDA கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராமநாதன் கடலூர் மாவட்டம் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் பி.வன்யா IRAS அதிகாரி ஆவார். இவரது சகோதரி சுஸ்மிதா IPS அதிகாரி ஆவார். தந்தை R.ராமநாதன், தாயார் இளவரசி. ஒரே குடும்பத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உருவானது தமிழக அளவில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவில் இவரது வீடு கடலூரில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அந்த கடின சூழ்நிலையிலும் சகோதரிகள் இருவரும் கல்வியில் சிறந்து, ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியாகவும் மற்றொருவர் ஐபிஎஸ் அதிகாரியாகவும் உயர்ந்தது மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

இதையும் படிங்க ரூ.13.18 லட்சம் கோடி கடன்.. வெள்ளை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்.. நிபுணர்கள் எச்சரிக்கை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com