Tuticorin Bus Accident : தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், வேன் மீது மோதுவதைத் தவிர்க்க முயன்ற அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.
Tuticorin Bus Accident : தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், வேன் மீது மோதுவதைத் தவிர்க்க முயன்ற அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.

Published on: July 31, 2026 at 2:56 pm
Updated on: July 31, 2026 at 2:57 pm
தூத்துக்குடி, ஜூலை 31, 2026: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (TNSTC) பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கிய விபத்தில், ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 1 மணியளவில் தூத்துக்குடி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றது.
விபத்து குறித்து போலீசார் தெரிவித்ததாவது, திருச்செந்தூரில் இருந்து குமுளி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது விளாத்திகுளம் சாலையிலிருந்து தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற வேன் திடீரென பேருந்தின் முன்பாக வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வேன் மீது மோதுவதைத் தவிர்க்க பேருந்து ஓட்டுநர் திடீரென வாகனத்தை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் சில பயணிகள் உட்பட மொத்தம் 10 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 7 சவரன் நகைக்காக 75 வயது மூதாட்டி கொலை… மகனையும் வெட்டிவிட்டு தப்பிய மர்ம நபர்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com