இரட்டிப்பு மகிழ்ச்சி.. இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவான நடிகர் கவின்!

Actor Kavin: நடிகர் கவின் மற்றும் அவரது மனைவி மோனிகாவுக்கு ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த மகிழ்ச்சியான செய்தியை கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Published on: July 31, 2026 at 2:42 pm

சென்னை, ஜூலை 31, 2026: நடிகர் கவின் மற்றும் அவரது மனைவி மோனிகா இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகியுள்ளனர். ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை கவின் வியாழக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்தார்.

“எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்” என்று தமிழில் பதிவிட்டிருந்தார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவின் வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இரட்டை குழந்தைகளின் வருகை கவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நான்காம் வகுப்புவரை பிறந்தநாள் கொண்டாடியதில்லை.. நடிகர் தனுஷ் உருக்கம்

“வாழ்நாள் முழுவதும் துணையாக இருப்பேன்”… மகனுடன் முதல் புகைப்படம் பகிர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ் !
Madhampatty Rangaraj

“வாழ்நாள் முழுவதும் துணையாக இருப்பேன்”… மகனுடன் முதல் புகைப்படம் பகிர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com