50 போலீசாருடன் திடீர் ரெய்டு… செங்கல்பட்டு எஸ்பி அதிரடி

SP’s Surprise Raid in Chengalpattu : செங்கல்பட்டில் மாவட்ட எஸ்பி ஐமன் ஜமால் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Published on: June 17, 2026 at 4:07 pm

செங்கல்பட்டு, ஜுன் 17 2026: செங்கல்பட்டு நகரில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால் தலைமையில் திடீர் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. காய்கறி மார்க்கெட், சின்னம்மன் கோயில், மக்கான் சந்து மற்றும் ராஜாஜி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நேரில் ஆய்வு செய்த அவர், வணிகர்களை சந்தித்து கடைகளில் மாமூல் வசூல் தொடர்பான மிரட்டல்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார். யாரேனும் ரவுடிகள் மிரட்டல் விடுத்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

ராஜாஜி சாலை மற்றும் பழைய ஜி.எஸ்.டி சாலையில் உள்ள நகைக்கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்குச் சென்ற எஸ்பி, வியாபாரிகளிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும் சோதனை செய்தார். விதிகளை மீறி குட்கா பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதியாக கருதப்படும் மக்கான் சந்து பகுதிக்குச் சென்ற அவர், அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது விற்பனை, இளைஞர்களின் ரவுடித்தனம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் குறித்து எவ்வித அச்சமுமின்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் அளிப்பவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்தார்.

முன்னறிவிப்பு ஏதுமின்றி, 50-க்கும் மேற்பட்ட போலீசாருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீரென சோதனையில் ஈடுபட்டதால், செங்கல்பட்டு நகர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், சமூக விரோதிகள் மத்தியில் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க ரூ.13.18 லட்சம் கோடி கடன்.. வெள்ளை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்.. நிபுணர்கள் எச்சரிக்கை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com