A Raja DMK controversy : “தி.மு.க.வின் ஆ.ராசா தனது வேலையை மட்டும் பார்த்தால் போதும்” என அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
A Raja DMK controversy : “தி.மு.க.வின் ஆ.ராசா தனது வேலையை மட்டும் பார்த்தால் போதும்” என அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

Published on: July 7, 2026 at 8:55 pm
சென்னை, ஜூலை 7, 2026: சென்னையில் மாவீரன் இரட்டைமலை சீனிவாசனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, திமுக எம்பி ஆ.ராசாவை குறிவைத்து பதிலடி அளித்தார்.
தொடர்ந்து, அவர் கூறுகையில், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்ற முழக்கத்தை விசிக தலைவர் தொல். திருமாவளவன் 2016-லேயே முன்வைத்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களில் வென்றபோதும் திமுக எங்களுக்கு ஆட்சியில் பங்கு தரவில்லை.
ஆனால், 2026 தேர்தலுக்குப் பிறகு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களே எங்களைத் தொடர்பு கொண்டு, அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டதால், கொள்கைக் கோட்பாட்டின்படி நாங்கள் இணைந்துள்ளோம் என்றார்.
அவர் மேலும், திமுக எம்பி ஆ.ராசா போன்றவர்கள் தங்களது வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்றும், தமிழ்நாட்டின் திசைவழியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு யாரும் ஆலோசனை சொல்ல வேண்டிய தேவையில்லை என்றும் வலியுறுத்தினார்.
வன்னி அரசு, திமுகவினர் அவதூறு பரப்புவது அவர்கள் ஆற்றாமையின் வெளிப்பாடாகும் என்று குற்றம் சாட்டினார். “அந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொண்டால் நாங்கள் பதிலடி கொடுப்போம்” என அவர் எச்சரித்தார்.
இந்தக் கருத்துகள், திமுக மற்றும் விசிக இடையேயான அரசியல் உறவுகள் குறித்து புதிய விவாதத்தை கிளப்பியுள்ளன. குறிப்பாக, அமைச்சரவையில் விசிக இணைந்திருப்பது, எதிர்கால அரசியல் சூழ்நிலைகளில் முக்கிய பங்காற்றும் என வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்? தேர்தல் வெற்றிக்கு எதிராக வழக்கு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com