செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்? தேர்தல் வெற்றிக்கு எதிராக வழக்கு!

Senthil Balaji election case : செந்தில் பாலாஜி தேர்தல் வெற்றிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Published on: July 7, 2026 at 8:32 pm

சென்னை, ஜூலை 7, 2026: கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் மணப்பள்ளியைச் சேர்ந்த வாக்காளர் பிரகாசம் என்பவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மற்றும் குற்றப் பின்னணிகள் குறித்த முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும், அரசு நிலத்தை வாங்கியதற்கான தடையில்லா சான்றிதழ் (NOC) இணைக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் அதிகாரியிடம் ஏற்கனவே புகார் அளித்தும், சுமார் 60 பக்கங்கள் கொண்ட மனுவை வழங்கியும், அதனை பரிசீலிக்காமல் நிராகரித்ததாக மனுதாரர் கூறியுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, சுயேச்சை வேட்பாளர் செந்தில்குமாரை விட 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், முறைகேடாக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவின் அடிப்படையில் பெற்ற இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இதனால், கோவை தெற்கு தொகுதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக புதிய சட்டப்பூர்வ சிக்கல்கள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க : ‘உயிரிழந்தோர் குடும்பங்களை சந்திக்க கூடாதா?’ – தி.மு.க.விடம் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

ஜே.என்.யூ திருவள்ளூவர் சிலையை திறக்க வாருங்கள்.. முதல்வர் விஜய்க்கு துணைவேந்தர் நேரில் அழைப்பு! CM Vijay at JNU

ஜே.என்.யூ திருவள்ளூவர் சிலையை திறக்க வாருங்கள்.. முதல்வர் விஜய்க்கு துணைவேந்தர் நேரில் அழைப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com