தமிழ்நாட்டில் ஆன்லைன் பத்திரப்பதிவு.. ஆகஸ்ட் 17 முதல் அமல்.. அமைச்சர் தகவல்!

Tamil Nadu online registration: தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 17 முதல் பத்திரப் பதிவு ஆன்லைன் மூலமாக நடைபெறும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது என அமைச்சர் கூறினார்.

Published on: July 7, 2026 at 8:21 pm

சென்னை, ஜூலை 7, 2026: தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 17 முதல் பத்திரப் பதிவு ஆன்லைன் மூலமாக நடைபெறும் புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார். இதன் மூலம், மக்கள் நேரடியாக பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் குறையும்.

அமைச்சர் கூறியதாவது, “ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் சரிபார்க்கப்பட்டு, ஒரே நாளில் அதனை ஆன்லைன் மூலமாகவே பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட்ட நெரிசல் சுமார் 30 சதவீதம் வரை குறையும்” என்றார்.

மேலும், மீதமுள்ள 70 சதவீத பணிகளையும் முழுமையாக ஆன்லைனுக்குக் கொண்டு வருவதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை கண்டறிந்து சரிசெய்த பிறகு, முழுமையான ஆன்லைன் பத்திரப்பதிவு முறை அமல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த புதிய திட்டம், பொதுமக்களுக்கு நேரத்தைச் சேமிக்கவும், பத்திரப்பதிவு செயல்முறையை எளிமையாக்கவும் உதவும். தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி, அரசு சேவைகளை மக்கள் வசதிக்கேற்ப மாற்றும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

இதையும் படிங்க : ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிரான வழக்கு.. தி.மு.க. மனு வாபஸ்.. பரபரப்பு தகவல்கள்!

ஜே.என்.யூ திருவள்ளூவர் சிலையை திறக்க வாருங்கள்.. முதல்வர் விஜய்க்கு துணைவேந்தர் நேரில் அழைப்பு! CM Vijay at JNU

ஜே.என்.யூ திருவள்ளூவர் சிலையை திறக்க வாருங்கள்.. முதல்வர் விஜய்க்கு துணைவேந்தர் நேரில் அழைப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com