ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிரான வழக்கு.. தி.மு.க. மனு வாபஸ்.. பரபரப்பு தகவல்கள்!

Karur stampede case : தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிரான வழக்கில், தி.மு.க. தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளது.

Published on: July 7, 2026 at 5:48 pm

புதுடெல்லி, ஜூலை 7, 2026: கரூர் கூட்ட நெரிசல் விபத்து வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகள் நீதிமன்ற அவமதிப்புக்குரியவை என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் அடிப்படையில், அவருக்கு எதிராக தனியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இடைக்கால மனுக்கள் இன்று வாபஸ் பெறப்பட்டன.

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஓய்வுபெற்ற நீதியரசர் அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட உயர் மட்டக் கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் திமுக சதி எனவும், காவல் துறையை வைத்து சூழல் உருவாக்கப்பட்டது எனவும் பொதுவெளியில் பேசியிருந்தார். இது விசாரணையை பாதிக்கும் வகையில் சாட்சிகளைக் கலைக்க முயற்சியாகும் என திமுக தரப்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், விசாரணை நிலுவையில் இருக்கும் போது அமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாகும் எனவும், இது நீதிமன்ற அவமதிப்பு வரம்பிற்குள் வருவதாகவும் தெரிவித்தனர். அதன்படி, திமுக தரப்பு இடைக்கால மனுக்களை வாபஸ் பெற்றதோடு, ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தனியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ‘உயிரிழந்தோர் குடும்பங்களை சந்திக்க கூடாதா?’ – தி.மு.க.விடம் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com