அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலா, டி.டி.வி தினகரன்? பரபரப்பு தகவல்கள்!

KC Karuppannan interview : அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலா, டி.டி.வி தினகரன் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: July 7, 2026 at 8:27 pm

ஈரோடு, ஜூலை 7, 2026: அதிமுகவில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் மற்றும் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.சி.கருப்பணன் பரபரப்பான பேட்டியளித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவில் அவர்கள் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறது. வாய்ப்பே இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? தலைமை தான் இதுகுறித்து இறுதி முடிவை எடுக்கும்” என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும், தவெக கட்சிக்குச் சென்ற சில முன்னாள் அமைச்சர்கள் தற்போது மனசு வெந்து, வேதனையோடு இருப்பதாகவும், ‘ஏன் அங்கு சென்றோம்’ என்று வருத்தப்படுவதாகவும் தெரிவித்தார். அவர்களும் மீண்டும் அதிமுகவிற்கே திரும்பி வர வாய்ப்புகள் உள்ளன என்றும், யார் வந்தாலும் சேர்த்துக்கொண்டு ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றார்.

கருப்பணனின் இந்தக் கருத்துகள், அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரன் மீண்டும் இணையும் வாய்ப்புகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கட்சியின் தலைமைத்துவம் எவ்வாறு முடிவு எடுக்கும் என்பது குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளது.

“என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள், உங்களுக்கே விடை தெரியும்” என்று அவர் பேட்டியை நிறைவு செய்தார். இதனால், அதிமுகவில் அடுத்தகட்ட அரசியல் மாற்றங்கள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : ‘உயிரிழந்தோர் குடும்பங்களை சந்திக்க கூடாதா?’ – தி.மு.க.விடம் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

ஜே.என்.யூ திருவள்ளூவர் சிலையை திறக்க வாருங்கள்.. முதல்வர் விஜய்க்கு துணைவேந்தர் நேரில் அழைப்பு! CM Vijay at JNU

ஜே.என்.யூ திருவள்ளூவர் சிலையை திறக்க வாருங்கள்.. முதல்வர் விஜய்க்கு துணைவேந்தர் நேரில் அழைப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com