Thoothukudi: தூத்துக்குடி மாவட்டம் குலத்தூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனச் சோதனையின்போது, மீன் ஏற்றிச் சென்ற மினி லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 338 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Thoothukudi: தூத்துக்குடி மாவட்டம் குலத்தூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனச் சோதனையின்போது, மீன் ஏற்றிச் சென்ற மினி லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 338 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Published on: October 4, 2026 at 1:23 pm
திருநெல்வேி, அக்.4, 2026: தூத்துக்குடி மாவட்டம் குலத்தூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனச் சோதனையின்போது, மீன் ஏற்றிச் சென்ற மினி லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 338 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.3 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சரக குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், விளாத்திகுளம் முதல் கீழவைப்பாறு கடற்கரை வரையிலான சாலையில் வெள்ளிக்கிழமை இரவு தீவிர வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆந்திரப் பதிவு எண் கொண்ட மீன் லாரி ஒன்றும், அதனைப் பின்தொடர்ந்து வந்த சொகுசு காரும் போலீசாரால் மடக்கப்பட்டன.
லாரியில் மீன்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் காலி பிளாஸ்டிக் தொட்டிகள் முன்பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகற்றி சோதனை செய்தபோது, பின்னால் சாக்கு மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், தலா 2 கிலோ எடையுள்ள 169 பொட்டலங்களில் மொத்தம் 338 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரி ஓட்டுநர் மற்றும் சொகுசு காரில் வந்த 2 பேர் என மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஆந்திரப் பிரதேசம் காக்கிநாடாவைச் சேர்ந்த ஜோஷுவா கனராஜ் ஆதி (47), தனவேல் (51), சீனிவாஸ் கல்யாண் (24) என அடையாளம் காணப்பட்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உர மூட்டைகள் என்ற பெயரில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கொண்டு வரப்பட்டதாகவும், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழவைப்பாறு கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, மீன் லாரி, சொகுசு கார் மற்றும் கைது செய்யப்பட்ட 3 பேரும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மூவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : ரூ.1 லட்சம் சம்பளம், சுற்றுலா விசா.. ஓமனில் 8 மாதங்கள் தவித்த தமிழக மீனவர்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com