புதிய உச்சம் தொட்ட விராத்கோலி.. டெஸ்ட்டை முந்திய ஐபிஎல் ரன்கள்!

Virath Kohli New IPL milestone :ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வரும் விராத்கோலி, தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளார்.

Published on: May 27, 2026 at 1:02 pm

சென்னை, மே 27 2026: இந்திய கிரிக்கெட் வீரர் விராத்கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்த ரன்களை விட ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து அவர் புதிய மைல்கல்லை தொட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராத் கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம், ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் அவர், ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரிலும் கோலி சிறப்பான பார்மில் விளையாடி வருகிறார். பல போட்டிகளில் அரைசதம் மற்றும் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார்.

குறிப்பாக, இந்த சீசனில் 500 ரன்களை கடந்த முதல் வீரராகவும், ஐபிஎல் வரலாற்றில் 9 சீசன்களில் 500க்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த முதல் வீரராகவும் சாதனை படைத்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் 800 பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.

இந்தியாவுக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,230 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்கள் அடித்துள்ளார். தற்போது ஐபிஎல்லில் 9,261 ரன்களுக்கு மேல் எடுத்து அசத்தி உள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்த ரன்களை மிஞ்சியுள்ளார்.

ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகளில் அவரது ஆதிக்கம் மேலும் வலுவடைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்துள்ள விராத் கோலி, தற்போது புதிய உச்சத்தை தொட்டு மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

இதையும் படிங்க : பிளே ஆஃப் செல்லாத பஞ்சாப்.. ஷ்ரேயாஸ் சகோதரியை குறி வைத்த நெட்டிசன்கள்!

இந்தியா- இலங்கை கிரிக்கெட் போட்டி.. பத்து ஆண்டுகளுக்கு முன் வரலாற்றை பதிவு செய்த விராட் கோலி.. தற்போது நினைவு கூறப்படுவது ஏன்?
Virat Kohli

இந்தியா- இலங்கை கிரிக்கெட் போட்டி.. பத்து ஆண்டுகளுக்கு முன் வரலாற்றை பதிவு செய்த

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com