திருச்சி இரட்டை கொலை வழக்கு… குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Trichy Double Murder Case: திருச்சி இரட்டைக்கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

Published on: May 27, 2026 at 1:30 pm

திருச்சி, மே 27 2026: திருச்சியில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள பேரகம்பியை சேர்ந்த அன்பழகன் (35) மற்றும் அவரது மனைவி லதா (33) ஆகியோர் கடந்த 2018 ஏப்ரல் 23-ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்ததை பயன்படுத்தி உள்ளே நுழைந்த மர்மநபர்கள், தம்பதியரை கொடூர ஆயுதங்களால் தாக்கி வீட்டில் இருந்த நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த அன்பழகன் மற்றும் லதா இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வளையூர் பகுதியை சேர்ந்த பழனிசாமி (21) மற்றும் பெரம்பலூரை சேர்ந்த கிஷாந்த் (21) ஆகியோர் இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு திருச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி பி. சுவாமிநாதன், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பழனிசாமி மற்றும் கிஷாந்த் ஆகிய இருவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க : ஆந்திரா டூ சென்னை.. 170 கிலோ கஞ்சா.. தட்டித் தூக்கிய தமிழ்நாடு போலீஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com