PM Modi NZ Visit: இந்தியா–நியூசிலாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை 2030-க்குள் இருமடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
PM Modi NZ Visit: இந்தியா–நியூசிலாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை 2030-க்குள் இருமடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Published on: July 11, 2026 at 2:43 pm
ஆக்லாந்து, ஜூலை 11, 2026: பிரதமர் மோடி இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலில் இந்தோனேசியா சென்ற அவர் தொடந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். அப்போது, இந்தியாவின் அணுசக்தி திட்டங்களுக்கு உதவும் வகையில் இந்தியாவுக்கு யுரேனியம் வழங்கவும், இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க ‘ககன்யான்’ விண்வெளித்திட்டத்தில் இணையவும் ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டது. இதற்காக கோகோஸ் தீவுகளில் தற்காலிக விண்வெளி கண்காணிப்பு நிலையம் அமைக்கவும் ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு சென்ற பிரதமர் மோடி, நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, இந்தியா–நியூசிலாந்து உறவு புதிய உயரத்தை எட்டியுள்ளதாகவும், 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை இருமடங்காக உயர்த்த இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
At the India-New Zealand business event in Auckland, which I attended with PM Luxon, I told business leaders:
— Narendra Modi (@narendramodi) July 11, 2026
India is not only a market.
India is a launchpad for global growth.
Together, let us take this economic partnership to new heights!@chrisluxonmp pic.twitter.com/8M53Lx47zh
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான உறவு தற்போது மூலோபாய கூட்டாண்மை (Strategic Partnership) நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம், கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் பல ஒப்பந்தங்கள் மற்றும் 2030 சாலைவரைபடம் (Roadmap to 2030) வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பயணம் கடந்த 40 ஆண்டுகளில் நியூசிலாந்துக்கு இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணமாகும். நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவை மேலும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும், இந்திய வம்சாவளியினருடன் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு, இரு நாடுகளின் நட்பு, ஜனநாயக மதிப்புகள் மற்றும் மக்களிடையேயான உறவுகள் இந்த கூட்டாண்மைக்கு வலுவான அடித்தளமாக இருப்பதாக குறிப்பிட்டார்.
இதையும் படிங்க “அவர்கள் என்னைக் கொல்லக் கூடும்”.. ஷேக் ஹசீனா பரபரப்பு பேட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com