சமூகத்தில் அன்பும், சமத்துவமும் நிலைக்க வேண்டும்…முதலமைச்சர் விஜய் பக்ரீத் வாழ்த்து

CM vijay Bakrid Wishes: தமிழக முதலமைச்சர் விஜய் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Published on: May 27, 2026 at 12:18 pm

சென்னை, மே 27 2026: தமிழக முதலமைச்சர் விஜய் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஈகைத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவனின் கட்டளைக்கிணங்க தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் நபி அவர்களின் உன்னதமான இறைபக்தியையும், தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

இறைநம்பிக்கை, தியாகம், கருணை, பகிர்வு, மனிதநேயம் ஆகிய உயரிய விழுமியங்களை மனிதகுலத்திற்கு உணர்த்தும் புனிதப் பெருநாளாக பக்ரீத் திகழ்கிறது.

ஏழை, எளிய மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும், சமூகத்தில் அன்பும், சமத்துவமும் நிலைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் பக்ரீத் திருநாளில் சமுதாயத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அனைவருக்கும் எனது பக்ரீத் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் திருநாள் வாழ்த்துகளை கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தி.மு.க. முயன்றது.. ஆதவ் அர்ஜுனா

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com