எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தி.மு.க. முயன்றது.. ஆதவ் அர்ஜுனா

Adhav Arjuna : எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க தி.மு.க முயன்றது என தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

Published on: May 26, 2026 at 2:03 pm

சென்னை, மே 26, 2026: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக, அதிமுக, பாஜக இணைந்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க முயற்சி செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். சென்னை பனையூரில் தவெக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.

திமுக-அதிமுக-பாஜக கூட்டணி குற்றச்சாட்டு

அப்போது, ஆதவ் அர்ஜுனா, “திமுக, அதிமுக, பாஜக இணைந்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க முயன்றனர்” என்று கூறினார். மேலும், கம்யூனிஸ்ட் தலைவர் பேபி, தவெக ஆதரவு இல்லையெனில் திமுக-அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பார்கள் என தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, விஜய்யை முதலமைச்சராக வராமல் தடுக்க சதி நடந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையில், சி.வி. சண்முகம் ஏன் வெளியே வந்தார்? எனக் கேள்வி எழுப்பிய ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் பல்வேறு அணிகள் உருவாகியிருப்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும், முன்னாள் முதலமைச்சர், “எதிர்க்கட்சியாக செயல்படுவோம்” என அறிக்கை வெளியிட்டது, அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததற்குப் பிறகே என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ஊழலை ஒழித்தவர் எங்கள் முதல்வர் ஜோசப் விஜய் எனக் கூறிய ஆதவ் அர்ஜுனா, 3 எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்ததை குதிரை பேரம் என குற்றம்சாட்டிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, “ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் திமுகவில் இணைந்தது குதிரை பேரம் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க : த.வெ.க.வில் இணையும் இசக்கி சுப்பையா? அடுத்த விக்கெட் காலி? பரபரக்கும் தமிழக அரசியல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com