பிளே ஆஃப் செல்லாத பஞ்சாப்.. ஷ்ரேயாஸ் சகோதரியை குறி வைத்த நெட்டிசன்கள்!

PBKS Playoff Fallout : பஞ்சாப் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாத நிலையில், ஆன்லைனில் சில விஷமிகள் ஷ்ரேயாஸ் ஐயரில் சகோதரியை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளன.

Published on: May 26, 2026 at 6:00 pm

புதுடெல்லி, மே 26, 2026: ஷ்ரேயஸ் ஐயர் சகோதரி ஷ்ரேஸ்தா, பஞ்சாப் கிங்ஸ் ஐ.பி.எல். 2026 பிளேஆஃப் வாய்ப்பு இழந்ததையடுத்து தன்னை மற்றும் குடும்பத்தை குறிவைத்து நடந்த ஆன்லைன் தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் இரண்டு பகுதிகளாக வீடியோ வெளியிட்டு, தனது ரீல் வெறும் நகைச்சுவை பாணியில் இருந்தது, தீங்கு செய்யும் நோக்கம் இல்லை என்று கூறியுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டபோது, இரு அணிகளும் ஒரு புள்ளி பெற்றன. அப்போது ஷ்ரேயாஸ் ஐயரின் சகோதரி, “நான் அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் மதிக்கிறேன்; யாரையும் கேலி செய்யவில்லை“ எனத் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் ஆறு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்தபோது, அந்த ரீல் மீண்டும் ரசிகர்களால் பகிரப்பட்டது. இதனால் ஷ்ரேஸ்தா மீது கடுமையான ட்ரோலிங் மற்றும் அப்யூஸ் நடந்தது. விமர்சனங்கள் சமூக ஊடகத்தைத் தாண்டி, அவரது வேலை இடம், மாணவர்கள், சக ஊழியர்கள் வரை சென்றது.

இதற்குப் பதிலளித்த ஷ்ரேயாஸ் சகோதரி, “நீங்கள் என் வேலை இடத்துக்கு அழைத்து, என் குடும்பத்தையும், மாணவர்களையும் தொந்தரவு செய்கிறீர்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தெரிவித்து இருந்தார். மேலும், “என்னை வெறுக்க விரும்பினால், அதனைத் தொடருங்கள். ஆனால் என் குடும்பத்தையும், வேலை இடத்தையும் குறிவைக்காதீர்கள்” என்று வலியுறுத்தினார். மேலும், அவர் தனது சகோதரனை எப்போதும் கொண்டாடுவேன், வெற்றி அல்லது தோல்வி எதுவாக இருந்தாலும் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் இந்திய கிரிக்கெட் ரசிகர் கலாச்சாரத்தின் நச்சுத்தன்மையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? பெங்களூரு- குஜராத் இன்று மோதல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com