ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறப்பு..பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

School Reopen : ஜூன் 4ம் தேதி அன்று ஒரே சீராக பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Published on: May 26, 2026 at 7:00 pm

சென்னை, மே 26 2026: தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதி தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் வருகிற ஜூன் 4-ம் தேதி ஒரே நாளில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026-2027 கல்வியாண்டுக்காக முன்னதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

ஆனால், மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடும் வெப்பநிலை, மாணவர்களின் நலன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 4-ம் தேதி வியாழக்கிழமை ஒரே சீராக திறக்கப்படும் என பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவி வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு பாடப்புத்தகங்கள், சீருடைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் உடனடியாக நிறைவு செய்ய கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கால்நடை மருத்துவப் படிப்பு..விண்ணப்பபதிவு தொடக்கம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com