Ravindra Jadeja Creates History | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) ரவிச்சந்திரன் அஸ்வினுக்குப் பிறகு 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றார்.
Ravindra Jadeja Creates History | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) ரவிச்சந்திரன் அஸ்வினுக்குப் பிறகு 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றார்.
Published on: November 2, 2024 at 8:18 pm
Ravindra Jadeja Creates History | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) ரவிச்சந்திரன் அஸ்வினுக்குப் பிறகு 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை நட்சத்திர இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பெற்றார். மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டின் 2வது நாளில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதாவது, நியூசிலாந்து மிடில் ஆர்டரில் டேரில் மிட்செல், டாம் ப்ளண்டெல், இஷ் சோதி மற்றும் மாட் ஹென்றி ஆகியோரை வெளியேற்றினார். 2021-2023 வரையிலான முந்தைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஜடேஜா, 13 போட்டிகளில் இருந்து 47 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
சௌராஷ்டிராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா, சமீப ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணியில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பின்தங்கிய பும்ரா ; முதலிடம் பிடித்த ரபாடா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com