ICC Test Rankings | ஐசிசி டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் இந்திய வீரர் பும்ரா முதலிடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் .
ICC Test Rankings | ஐசிசி டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் இந்திய வீரர் பும்ரா முதலிடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் .
Published on: October 30, 2024 at 7:40 pm
ICC Test Rankings | ஐசிசி டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரபாடா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியரபாடா இதன்மூலம் டெஸ்ட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் மிகவும் வேகமாக 300 விக்கெட்டுகளை எடுத்தவர் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இதனால் 860 புள்ளிகளுடன் ரபாடா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய வீரர் பும்ரா முதலிடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் . ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் 2வது இடத்திலும், இந்திய வீரர் அஸ்வின் 4வது இடத்திலும் , ஜடேஜா 8வது இடமும் பிடித்துள்ளனர்.
பேட்டிங் தரவரிசையில் ஜெய்ஸ்வால் 3-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகீல் 20 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா 8 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க முதல் இந்தியர்.. டெஸ்டில் ஜெய்ஸ்வால் படைத்த சாதனை: இதை கொஞ்சம் நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com