Priyanka Gandhi | பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைத்துவிட்டார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.
Priyanka Gandhi | பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைத்துவிட்டார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.
Published on: November 2, 2024 at 8:23 pm
Priyanka Gandhi | பிரதமர் நரேந்திர மோடி 140 கோடி இந்தியர்களுக்கு மீண்டும் மீண்டும் வெற்று வாக்குறுதிகளை அளித்து தனது பதவியின் கண்ணியத்தை குறைத்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை (நவ.2, 2024) குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதாவது பிரியங்கா காந்தி, உண்மையை நாடுவதன் மூலம் தனது பதவியின் கண்ணியத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துமாறு மோடியை அவர் வலியுறுத்தினார். முன்னதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “காங்கிரஸின் மாநில பிரிவுகள் தங்களின் வாக்குறுதிகள் முறையாக பட்ஜெட்டில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.
மேலும், “நிறைவேற்ற முடியாத மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளில் கவனமாக இருக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த நிலையில பிரதமர் மோடி காங்கிரஸின் நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்து பேசி இருந்தார். இதையடுத்து பிரியங்கா காந்தியிடம் இருந்து இந்த காட்டமான விமர்சனம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க வயநாடு மறு சீரமைப்பு பணிகள்; நிதி வழங்காத மோடி அரசு: பிரியங்கா பரப்புரை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com