Arvind Kejiriwal | டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உயர்த்தப்பட்ட தண்ணீர் மற்றும் மின்சார கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார்.
Arvind Kejiriwal | டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உயர்த்தப்பட்ட தண்ணீர் மற்றும் மின்சார கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார்.
Published on: November 2, 2024 at 7:56 pm
Arvind Kejiriwal | ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உயர்த்தப்பட்ட குடிநீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக உறுதியளித்தார்.
டிரான்ஸ்போர்ட் நகரில் விஸ்வகர்மா தின நிகழ்வில் பொதுமக்களிடம் பேசிய கெஜ்ரிவால், “நான் மற்ற கட்சிகளின் தலைவர்களைப் போல அரசியல்வாதி இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தேன். நான் நாட்டின் கல்வி நிறுவனத்தில் படித்துள்ளேன், எனவே எனக்கு எப்படி வேலை செய்வது என்று தெரியும்” என்றார்.
தொடர்ந்து, கெஜ்ரிவால் டெல்லி மதுபானக் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய சிறையில் இருந்த காலத்தை விவரித்தார். அப்போது கெஜ்ரிவால், “நான் இல்லாத நேரத்தில், நகர அரசாங்கம் லெப்டினன்ட் கவர்னரால் நடத்தப்பட்டது.
அப்போது தண்ணீர் மற்றும் மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. கவலைப்படாதீர்கள். இப்போது நான் வெளியே வந்துவிட்டேன், பிப்ரவரியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததும் உங்கள் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும்” என்றார்.
இதையடுத்து, பெண்களுக்கு இலவச பேருந்து சேவைகள் உட்பட கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் தனது கட்சியின் சாதனைகளை அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்துரைத்தார்.
அப்போது, “உழைத்தவர்களுக்கு வாக்களியுங்கள். ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள் என்று நான் கூறவில்லை. பா.ஜ.க.விடம் உங்கள் பிள்ளைகளுக்கு என்ன செய்தார்கள் என்று கேளுங்கள்; டெல்லி மக்களுக்காக அவர்கள் செய்த ஒரு வேலையை காட்டும்படி நான் சவால் விடுகிறேன்” என்றார்.
இதையும் படிங்க பரபரக்கும் மகாராஷ்டிரா; மகனை களமிறக்கிய ராஜ் தாக்கரே: பா.ஜ.க, ஷிண்டே நிலைப்பாடு என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com