Narendra Modi | காங்கிரஸை நகர்ப்புற நக்சல் கும்பல் நடத்துகிறது என்று குற்றம் சாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் ஆபத்தான நிகழ்ச்சி நிரலை முறியடிக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், காங்கிரஸ் தனது சுயநல அரசியலுக்காக ஏழைகளை கொள்ளையடித்தது; அவர்களின் நிலையை மேம்படுத்தவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய மோடி, “நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், நாட்டைப் பிரிக்கும் அவர்களின் செயல்திட்டம் தோல்வியடையும் என்று அவர்கள் (காங்கிரஸ்) நினைக்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் தனது சுயநல அரசியலுக்காக ஏழைகளை கொள்ளையடித்து அவர்களை ஏழையாக வைத்திருக்க நினைக்கிறது. அவர்களுக்கு, மக்களை பிளவுபடுத்த மட்டுமே தெரியும். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். நகர்ப்புற நக்சல் கும்பலால் காங்கிரசை நடத்துகிறது” என்றார்.
மேலும், “இந்தியா மீது நல்லெண்ணம் இல்லாதவர்களுடன் காங்கிரஸ் எவ்வளவு நெருக்கமாக நிற்கிறது என்பதை அனைவரும் பார்க்கலாம். சமீபத்தில் டெல்லியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ஒருவரை சந்தேகிக்கிறார்கள்.
இளைஞர்களை போதைப்பொருளுக்குத் தள்ளி கிடைக்கும் பணத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸின் சிந்தனை அந்நியமானது” என்றார்.
இதையடுத்து, “பிரிட்டிஷ் ஆட்சியைப் போல், இந்த காங்கிரஸ் குடும்பமும் தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினரைத் தங்களுக்குச் சமமாக கருதுவதில்லை. இந்தியாவை ஒரே குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் பஞ்சாரா சமூகத்தை எப்போதும் இழிவான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகின்றனர்” என்றார்.
மேலும், “பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த துறவிகள் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தை ஊக்கப்படுத்தினர். ஆங்கிலேயர்கள் சமூகத்தைத் துன்புறுத்தினர். காங்கிரஸ் நடத்தும் அரசுகள் விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தையும், பாசனத் திட்டங்களையும் ஊழலுக்குப் பயன்படுத்தின.
அவர்களின் பொய் பிரசாத்தில் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். தெலுங்கானாவில் கடன் தள்ளுபடிக்காக மக்கள் இன்னும் காத்திருக்கின்றனர்.கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சியில் துவங்கப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களை, காங்கிரஸ் அரசு நிறுத்தியது” என்றார்.
இதையும் படிங்க
PM Narendra Modi’s international awards: கடந்த 11 ஆண்டுகளில் 29 சர்வதேச விருதுகளை வென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி….
Narendra Modi Oman Visit: பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) ஓமன் செல்கிறார்….
Donald Trump: இந்தியா அற்புதமான நாடு; பிரதமர் நரேந்திர மோடி சிறந்த நண்பர் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்….
Narendra Modi: இந்தியா-ஜோர்டான் 75 ஆண்டுகால தூதரக உறவை கொண்டாடும் வகையில், அந்நாட்டின் மன்னரை சந்தித்து உரையாடினார் பிரதமர் நரேந்திர மோடி….
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு பயணத்தை இன்று (டிச.15, 2025) தொடங்கினார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்