8 ஆண்டுக்கு முன்பு வந்தேன்.. கையும் களவுமாக சிக்கிய வங்கதேசவாசி.. மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

Bangladeshi Held in Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித் திரிந்த வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Published on: May 24, 2026 at 3:03 pm

கொல்கத்தா, மே 24, 2026: மேற்கு வங்காள மாநிலம் சந்தேஷ்காலி பகுதியில், தனது சுய அடையாளத்தை மறைத்து எட்டு ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்ததாகக் கூறப்படும் வங்களாதேசத்தை சேர்ந்த எம்.ஹெச். இஸ்லாம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் இவரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, எம்.ஹெச் இஸ்லாமை கிராம மக்கள் சந்தேகத்துடன் விசாரித்தபோது, அவர் 2018-இல் சட்டவிரோதமாக சத்கீரா எல்லை வழியாக இந்தியா நுழைந்ததாக ஒப்புக்கொண்டார். இதற்கிடையில், அவரது ஒப்புக்கொள்ளல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், “நான் பங்களாதேஷ் குடிமகன். 2018-இல் சட்டவிரோதமாக இந்தியா வந்தேன்.” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : லடாக்கில் திடீர் ஹெலிகாப்டர் விபத்து.. உயிர் பிழைத்த 3 அதிகாரிகள்.. பகீர் தகவல்கள்!

பள்ளியில் கேலி, கிண்டல்.. ஜெய்ப்பூரில் 4ஆம் வகுப்பு மாணவி த*கொலை.. அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி காட்சி!
Jaipur Class 4 Student Dies by Suicide

பள்ளியில் கேலி, கிண்டல்.. ஜெய்ப்பூரில் 4ஆம் வகுப்பு மாணவி த*கொலை.. அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com