Rahul Gandhi : “காங்கிரஸ் கட்சியில் உள்ள இஸ்லாமிய தலைவர்கள் தங்களின் சமூக பிரச்னையை வெளிப்படையாக பேச வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Rahul Gandhi : “காங்கிரஸ் கட்சியில் உள்ள இஸ்லாமிய தலைவர்கள் தங்களின் சமூக பிரச்னையை வெளிப்படையாக பேச வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Published on: May 24, 2026 at 2:47 pm
புதுடெல்லி, மே 24, 2026: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் இஸ்லாமிய தலைவர்கள் தங்கள் சமூகத்தைச் சார்ந்த பிரச்சினைகளை வெளிப்படையாக முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது குறித்து ராகுல் காந்தி, “இஸ்லாமியர்” என்ற சொல்லை தவிர்க்காமல் நேரடியாக பயன்படுத்த வேண்டும் என்றும், சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க கட்சி அமைப்பில் வலுவான தளத்தை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.
காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு ஆலோசனை குழு கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அதில், : முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி நடந்தால், “முஸ்லிம்” எனவே குறிப்பிட வேண்டும்; “சிறுபான்மை” என்ற பொதுவான சொல்லை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல், அதேபோல், தலித், ஒ.பி.சி, அல்லது பிற சமூகங்களுக்கு தாக்குதல் நடந்தால், அந்த சமூகத்தின் பெயரைத் தெளிவாக குறிப்பிட வேண்டும் எனவும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையில், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் சட்டமன்றத் தேர்தல்கள் “சுதந்திரமாகவும் நியாயமாகவும்” நடத்தப்படவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க : எபோலா எதிரொலி: டெல்லி விமான நிலையத்தில் தீவிர சுகாதார பரிசோதனை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com