லடாக்கில் திடீர் ஹெலிகாப்டர் விபத்து.. உயிர் பிழைத்த 3 அதிகாரிகள்.. பகீர் தகவல்கள்!

Ladakh Chopper Mishap : லடாக்கில் இந்திய இராணுவ ஹெலிகாப்டர் விபத்து சிக்கியது. இதில், மூன்று அதிகாரிகள் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர்.

Published on: May 23, 2026 at 3:10 pm

லடாக், மே 23, 2026: லடாக்கின் தாங்க்ஸ்டே மலைப்பகுதியில் இந்திய இராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் லெப்டினன்ட் கர்னல், மேஜர் மற்றும் 3வது காலாட்படை பிரிவு GOC ஆகியோர் பயணம் செய்தனர்.

இந்நிலையில், கடினமான நிலப்பரப்பில் விபத்து நடந்த போதிலும், மூவரும் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தனர். இந்த விபத்து புதன்கிழமை (மே 20, 2026) நடந்துள்ளது. ஆனால் விவரங்கள் இன்று (சனிக்கிழமை) வெளிவந்தன. இந்நிலையில், விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம், இந்திய இராணுவத்தில் இன்னும் பயன்படுத்தப்படும் பழைய சீட்டா மற்றும் சேதக் ஹெலிகாப்டர்கள் குறித்து கவலை எழுப்பியுள்ளது. குறிப்பாக லடாக் மற்றும் சியாச்சின் பனிப்பாறை போன்ற உயரமான பகுதிகளில் இவை பயன்படுத்தப்படுவதால், பாதுகாப்பு சவால்கள் அதிகரிக்கின்றன.

இதற்கிடையில், இந்திய இராணுவம், அடுத்த 1–2 ஆண்டுகளில் பழைய ஹெலிகாப்டர்களை படிப்படியாக நீக்கி, புதிய சிறிய ரக ஹெலிகாப்டர்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த முழுமையான மாற்று செயல்முறை 8–10 ஆண்டுகள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இராணுவத்தின் செயல்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய, சுமார் 250 புதிய ஹெலிகாப்டர்கள் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : திரிணாமுல் காங்கிரஸ் ஐஸ்-ஐ விட வேகமாக உருகிறது.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கர்நாடகாவில் இஸ்லாமிய வாக்காளர்கள் பெயர் நீக்க முயற்சி.. பா.ஜ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
Karnataka SIR Voter List Row

கர்நாடகாவில் இஸ்லாமிய வாக்காளர்கள் பெயர் நீக்க முயற்சி.. பா.ஜ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com