TMC Melting : மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஐஸ்-ஐ விட வேகமாக உருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
TMC Melting : மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஐஸ்-ஐ விட வேகமாக உருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

Published on: May 23, 2026 at 2:46 pm
கொல்கத்தா, மே 21, 2026: சிபிஐ(எம்) மேற்கு வங்க பொதுச் செயலாளர் முகமது சலீம், “இந்த கோடை வெப்பத்தில் திரிணாமூல் காங்கிரஸ் பனிக்கட்டியை விட வேகமாக உருகி வருகிறது” என்று கடுமையாக விமர்சித்தார். மேலும், மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சியிடமிருந்து எதிர்க்கட்சித் தளத்தை கைப்பற்றும் வாய்ப்பு இடதுசாரிகளுக்கு உள்ளது என அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, சிபிஐ(எம்) மற்றும் இடது முன்னணி, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை எதிர்கொள்வதில் முன்னணியில் இருப்பதாக சலீம் கூறினார். இதற்கிடையில், “மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவது கடினமானது, ஆனால் சாத்தியமற்றது அல்ல” என அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், 2021 தேர்தலில் வெறும் 4.45% வாக்குகள் பெற்றிருந்தாலும், இடதுசாரிகள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். மேற்கு வங்கத்தில், 1977 முதல் 2011 வரை ஆட்சி செய்த இடது முன்னணி ஆட்சி செய்தது. இதனை முழுவதுமாக மம்தா பானர்ஜி முடிவுக்கு கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எபோலா எதிரொலி: டெல்லி விமான நிலையத்தில் தீவிர சுகாதார பரிசோதனை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com