சரிவில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி.. மே 23 ரேட் நிலவரம்!

Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது.

Published on: May 23, 2026 at 11:18 am

சென்னை, மே 23 2026: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது. நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்றும் விலை மேலும் குறைந்திருப்பது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 240 குறைந்து ரூ.1,18,240க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.14,780க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 குறைந்து ரூ.14 ஆயிரத்து 730 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 8 கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ரூ. 16 ஆயிரத்து 69க்கும், 8 கிராம் ரூ. 1 லட்சத்து 28 ஆயிரத்து 552க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் காரணமாக தங்கம் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளி விலை

இதற்கிடையில், சென்னையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே நிலை நீடித்து வருகிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 295க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்துக்கு விற்பனையாகி வருகிறது.

இதையும் படிங்க டாடா கம்யூனிகேஷன்ஸ் புதிய சி.இ.ஓ.. யார் இந்த கணபதி லட்சுமிநாராயணன்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com