பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு.. 10 நாட்களில் ஹாட்ரிக்.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Petrol and Diesel Prices Hiked : பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Published on: May 23, 2026 at 11:08 am

புதுடெல்லி, மே 23 2026: மேற்காசிய போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 87 பைசாவும், டீசல் லிட்டருக்கு 91 பைசாவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்குப் பிறகு, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.31 க்கும், டீசல் ரூ.96.98 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாதத்தில் ஏற்கனவே பல முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் 3 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களில் விலையும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com