Rukmini Warns of Legal Action : இணையத்தில் மார்பிங் செய்யப்பட்ட படங்கள் பரவிய நிலையில், நடிகை ருக்மிணி வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Rukmini Warns of Legal Action : இணையத்தில் மார்பிங் செய்யப்பட்ட படங்கள் பரவிய நிலையில், நடிகை ருக்மிணி வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: May 24, 2026 at 3:05 pm
பெங்களூரு, மே 24, 2026: கன்னட நடிகை ருக்மிணி வசந்த், சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்கள், ஏ.ஐ மூலம் மாற்றப்பட்டு பரவியதை கடுமையாக கண்டித்துள்ளார். இது தனியுரிமை மீறல் என அவர் கூறி, சட்ட நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகை ருக்மிணி வசந்தின் முகத்தை ஏ.ஐ மூலம் மாற்றி, தவறான புகைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதைப் பார்த்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி மற்றும் கோபம் தெரிவித்தனர். இந்நிலையில் இதனை ருக்மிணி வசந்த்கண்டித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இது மிகப்பெரிய தனியுரிமை மீறல். என் கண்ணியத்தை காயப்படுத்தும் செயல். இது பொறுத்துக் கொள்ள முடியாதது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள அவர் பெண்கள் மீதான இத்தகைய செயற்கை நுண்ணறிவு தவறுகள் மிகப்பெரிய ஆபத்து” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : தனுஷின் கர படம் தியேட்டரில் மிஸ் ஆகிட்டா? வீட்டிலேயே பார்க்கலாம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com