பாக்யராஜ் நினைவு அஞ்சலி.. கோவையில் நடக்கிறது!

Tribute to Bhagyaraj: மறைந்த இயக்குனர் கே. பாக்யராஜ் நினைவு அஞ்சலி கோவையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெறுகிறது.

Published on: July 9, 2026 at 11:16 am

Updated on: July 9, 2026 at 11:19 am

கோயம்புத்தூர், ஜூலை 9, 2026: கோவையில் மறைந்த திரைப்பட இயக்குநரும், நடிகரும், திரைக்கதை மன்னனுமான கே. பாக்யராஜ் அவர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஜூலை 11, சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் கலை அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். மலரஞ்சலி மற்றும் நினைவஞ்சலி நிகழ்வில் திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள உள்ளனர்.

கே. பாக்யராஜ் கடந்த ஜூன் 27, 2026 அன்று காலமானார். அவரின் வாழ்வையும் சாதனைகளையும் போற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் மகன் சாந்தனு பாக்யராஜ் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பழம்பெரும் நடிகர் சிவகுமார், பாக்யராஜ் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்த உள்ளார்.

நீண்டகால நண்பரும் இயக்குநருமான ஆர். சுந்தர்ராஜன், பாக்யராஜ் அவர்களுடனான தனது நட்பு மற்றும் தனிப்பட்ட நினைவுகளை பகிர்ந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். தமிழ் சினிமாவில் எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த பாக்யராஜ், “திரைக்கதையின் மன்னன்” என்று அனைவராலும் போற்றப்பட்டவர்.

இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியை அன்னபூர்ணா ஹோட்டல் தலைவர் டி. சீனிவாசன், கோவை முன்னாள் மேயர் வி. கோபாலகிருஷ்ணன், ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன், லயன்ஸ் கிளப் முன்னாள் இயக்குநர் கே.ஜி. ராமகிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் நா. மனோகரன், தி ஹிந்து (கோவை) பொது மேலாளர் ஆர்.எல்.என். சிவகுமார், சசி அட்வர்டைசிங் ஆர். சுவாமிநாதன் மற்றும் பாக்யராஜ் ரசிகர் மன்றத்தினர் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். பொதுமக்களும், ரசிகர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு பாக்யராஜ் அவர்களின் நீங்கா புகழுக்கு மரியாதை செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : ரூ.50 கோடி வசூல்.. பாலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த ஆலியா பட்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com