பழனி தாலுகா எஸ்.ஐ பணியிடை நீக்கம்.. பகீர் பின்னணி தகவல்!

Obscene Text Case SI Suspended : பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகோபால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான பின்னணி தகவல்கள் பகீர் கிளப்புகின்றன.

Published on: May 24, 2026 at 4:42 pm

திண்டுக்கல், மே 24, 2026: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புகார் அளித்த பெண்ணுக்கு அசிங்கமான குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டில், காவல் நிலைய உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) ராஜகோபால் (வயது 43) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் காவல்துறையின் ஒழுக்கம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

குற்றச்சாட்டு என்ன?

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அலைபேசி எண் பெற்ற எஸ்.ஐ, பின்னர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், பெண் உரிய ஆதாரங்களுடன் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல் உயர் அதிகாரிகள் உடனடியாக விசாரணை தொடங்கினர்.

இந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால் பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சசிமோகன் உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சமூக எதிர்வினை

இந்தச் சம்பவத்தில் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது; பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறை அதிகாரியே அத்துமீறியதால் பொதுமக்கள் தங்களது அதிர்ச்சியை தெரிவித்துள்ளனர். மேலும், பெண்கள் புகார்களை காவல்துறை எவ்வாறு கையாள வேண்டும் என நீதிமன்றம் வழிகாட்டுதல்கள் வழங்கியிருப்பது என்னானது எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்கள்.

இதையும் படிங்க : த.வெ.க ரீல் அரசு.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com