த.வெ.க ரீல் அரசு.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

EPS Slams TVK : பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க தமிழக வெற்றிக் கழக ரீல் அரசு தவறிவிட்டது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளா்ர்.

Published on: May 24, 2026 at 2:03 pm

சென்னை, மே 24, 2026: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக வெற்றிக் கழக அரசு “ரீல் அரசு” போல செயல்படுகிறது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிவிட்டது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி, “கோயம்புத்தூரில் புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் நடவடிக்கை எடுக்காததால், சட்டம்-ஒழுங்கு குறைபாடு வெளிப்பட்டது.
சிறுமியின் உயிரைக் காப்பாற்ற முடியாதது, நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது. அரசு உண்மையான அரசு போல அல்ல, ரீல் அரசு போல செயல்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் சிறுமி பாலியல் வன்கொடுமை- கொலை வழக்கில் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், “பெண்கள் பாதுகாப்பு குறித்து வெறும் விளம்பர நடவடிக்கைகள் போதாது, நிரந்தர பாதுகாப்பு அமைப்புகள் தேவை” என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்; பெண்கள் பாதுகாப்புக்கான நிரந்தர அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : 2 லட்சம் கோடி கடன்.. 70 ஆயிரம் ஊழியர்கள் மட்டுமே பணி.. அமைச்சர் நிர்மல் குமார்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com