LPG Subsidy: வீட்டு உபயோக எல்.பி.ஜி (LPG) சிலிண்டர்களுக்கு மானியம் பெற விரும்பும் நுகர்வோர், அக்டோபர் 1-ம் தேதிக்குள் ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
LPG Subsidy: வீட்டு உபயோக எல்.பி.ஜி (LPG) சிலிண்டர்களுக்கு மானியம் பெற விரும்பும் நுகர்வோர், அக்டோபர் 1-ம் தேதிக்குள் ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Published on: September 22, 2026 at 12:27 pm
புதுடெல்லி, செப்.22, 2026: வீட்டு உபயோக எல்.பி.ஜி சிலிண்டர்களுக்கு மானியம் பெற விரும்பும் நுகர்வோர், அக்டோபர் 1-ம் தேதிக்குள் ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்தவர்கள் மீண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை.
ஆதார் அங்கீகாரத்தை முடிக்காதவர்கள், எல்.பி.ஜி சிலிண்டர் விநியோகத்தின்போது, விநியோகஸ்தர் அலுவலகத்தில் அல்லது எண்ணெய் நிறுவனங்களின் மொபைல் செயலிகள் மூலம் பதிவு செய்யலாம். இண்டேன் வாடிக்கையாளர்கள் IndianOil ONE, பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் HelloBPCL, ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் HP PAY செயலி மூலம் இந்த செயல்முறையை மேற்கொள்ளலாம்.
ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரம் இல்லாவிட்டாலும் LPG சிலிண்டரை பெற முடியும். ஆனால் மானியம் இல்லாமல் சந்தை விலையில் சிலிண்டர் வழங்கப்படும். இதற்காக எண்ணெய் நிறுவனங்களின் இணையதளம், செயலி, வாட்ஸ்அப் சாட்பாட் அல்லது IVRS உள்ளிட்ட டிஜிட்டல் வழிகளில் தங்களது விருப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
மானிய சிலிண்டர்கள் முறைகேடாக வணிகம் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு திருப்பி விடப்படுவதைத் தடுப்பதும், போலி மற்றும் தகுதியற்ற இணைப்புகளை நீக்குவதும் இந்த நடவடிக்கையின் நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 19 நிலவரப்படி, மொத்தம் 27.43 கோடி, அதாவது 89.9 சதவீத வீட்டு LPG நுகர்வோர் ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடித்துள்ளனர்.
ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கான காலக்கெடு ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 1 இறுதி காலக்கெடுவாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மானிய விலையில் அடுத்த LPG சிலிண்டரை பெற விரும்பும் தகுதியான நுகர்வோர் அதற்கு முன்பாக அங்கீகாரத்தை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். LPG தொடர்பான உதவிக்கு 1800 2333 555 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
இதையும் படிங்க :தங்கம் விலையில் அதிரடி சரிவு.. இன்று ரேட் என்னத் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com