டிஜிட்டல் மோசடியில் பணம் இழந்தால் வங்கிகள் இழப்பீடு வழங்க வேண்டும்.. உச்ச நீதிமன்றம்

Digital Fraud: டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு வங்கிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published on: October 30, 2026 at 11:50 am

Updated on: October 30, 2026 at 11:52 am

புதுடெல்லி, அக்.30, 2026: டிஜிட்டல் மோசடிகள் மற்றும் ‘டிஜிட்டல் கைது’ மோசடிகளில் பொதுமக்கள் இழக்கும் பணத்தை மீட்டுத் தருவதில் வங்கிகளுக்கும் பொறுப்பு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வங்கிகளின் உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறைபாடு இருந்ததால்தான் மோசடி நடந்தது என்பது விசாரணையில் உறுதியானால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த தொகைக்குக் குறையாத இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, வங்கிகள் சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க வேண்டும் என்று தெரிவித்தது. வாடிக்கையாளரின் வழக்கமான பரிவர்த்தனைகளிலிருந்து மாறுபட்டு, திடீரென அதிக தொகை அனுப்ப முயன்றால், அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும் வரை அந்தப் பரிவர்த்தனையைத் தற்காலிகமாக நிறுத்துவது குறித்தும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

மேலும், சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் குறித்து தானாகவே தகவல் தெரிவிக்கும் நடைமுறையை உருவாக்கவும், தேவைப்படும் இடங்களில் நேரடி சரிபார்ப்பை மேற்கொள்ளவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மோசடிகளை முன்கூட்டியே கண்டறிய வேண்டும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இதற்கிடையே, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முன்மொழிந்துள்ள புதிய KYC விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்ய உள்ளது. இந்த விதிமுறைகள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட்டு, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் நடைமுறைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளன. சைபர் மோசடிகளால் இந்த ஆண்டு இதுவரை சுமார் 800 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : பங்குச்சந்தையில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் அதிரடி.. முதல் நாளிலேயே இலக்கு விலையைத் தாண்டியது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com