K.N. Nehru: கே.என். நேரு தொடர்புடைய 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
K.N. Nehru: கே.என். நேரு தொடர்புடைய 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

Published on: October 30, 2026 at 11:37 am
சென்னை, அக்.30, 2026: தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான கே.என். நேரு தொடர்புடைய 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை (அக். 29) அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, கோவை, நாமக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அரசு வேலைகளுக்குப் பணம் பெற்றதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தில் சுமார் 634 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வழக்கில் கே.என். நேரு உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. சோதனையின்போது 170 ஆவணங்களும் 13 மின்னணு சாதனங்களும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.’
இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கே.என். நேரு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். முன்னதாக, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம்.. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com