Congress corporator shot dead | உஜ்ஜெயின்: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெயினில் இன்று (அக்.11, 2024) அதிகாலை 5 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி ஹாஜி கலீம் கான் (60) என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அவரது மனைவியை போலீசார் கைதுசெய்தனர். முதல்கட்ட விசாரணையில், நிலத் தகராறில் இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் மேற்கொண்டு வழக்கு விசாரணையை நடத்திவருகிறார்கள். இதற்கிடையில் நிலத்தகராறு விவகாரத்தில் கான் மீது ஏற்கனவே குடும்ப உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் உஜ்ஜெயினி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீல்கங்கா காவல் நிலைய போலீசார் வழக்கு குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க
Bengaluru: பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் கடத்தி வந்த வெளிநாட்டு பயணிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்….
Honor Killing in UP: உத்தரப் பிரதேசத்தில் 15 வயதான மாணவியை தந்தை மற்றும் மகன் ஆகியோர் சுட்டு ஆணவ படுகொலை செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன….
Bengaluru: பெங்களூருவில் பெண் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளருக்கு (பிஎஸ்ஐ) எதிராக சமூக ஊடகங்களில் ஆட்சேபகரமான கருத்துக்களை பதிவிட்ட இருசக்கர வாகன ஓட்டி மீது கர்நாடக காவல்துறை…
Sexually abusing lovers son in UP: கள்ளக் காதலி மகனுக்கு பாலியல் தொல்லை அளித்து, அவரின் இரகசிய உறுப்புகளில் சர்ஜரி செய்ய வற்புறுத்திய நபரை போலீசார்…
BSP leader Armstrongs murder case in MHC: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி நீதிமன்றம் அதிரடி…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்